மீண்டும் சேது சமுத்திர திட்டம்? அவிழுமா மர்ம முடிச்சுகள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவு அருகே கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது

மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ்குமார் தலைமையில் நிபுணர் குழுவினர், கடந்த வாரம் முழுவதும் நவீன கப்பல் மூலம் ராமேஸ்வரம் தீவு அருகே ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு சேது சமுத்திர திட்டத்திற்காக நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரூ.2500 கோடி மதிப்பீட்டில் காங்கிரஸ் ஆட்சியில் 2005ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சேது சமுத்திர கால்வாய் திட்டம் பின்னர் சில அரசியல் காரணங்களால் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று நிறுத்தப்பட்டது.

ஆனால் இதை மாற்று பாதையில் அமைப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜ.க கூறி வந்தது. இந்நிலையில் மத்திய அரசின் ஆய்வு குழுவினர் ராமேஷ்வரம் கடல் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர், இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இணையத்தில் துறைமுகம் கட்டம் மத்திய அரசு அனுமதித்தது. இது நடந்தால் குளச்சலுக்கு பொருளாதார ரீதியில் வலுசேர்க்கும்.

அதற்கு சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்துவது அவசியம். அதற்காகவே இந்த ஆய்வு என சொல்லப்படுகிறது.

தனுஸ்கோடியையும், இலங்கை தலைமன்னரையும் இணைத்து வங்காள விரிகுடா கடலில் பாலம் கட்டினால் கப்பல்கள் செல்ல வசதியாக பாலத்தின் ஒரு பகுதியை கடலுக்கு அடியில்

சுரங்க பாதையாக அமைத்து கொள்ளலாம். இந்த விடயத்துகாகவும் ஆய்வு நடத்தப்பட்டது என இன்னொரு தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே சேதுசமுத்திர திட்டமே வேண்டாம் என்பது தமிழக அரசின் முடிவாக இருப்பதால், இந்த ஆய்வு குறித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments