பிரியாணிக்கு ஆசைப்பட்டு சென்ற 16 வயது சிறுமி: தலையில் கல்லை போட்டு கொன்ற காம கொடூரன்

Report Print Basu in இந்தியா

ஐதராபாத்தின் புறநகர் பகுதிக்கு அருகே பள்ளி மாணவி ஒருவர் கை கட்டப்பட்டு தலை நசுங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9ம் வகுப்பு படிக்கும் அமினா மல்லையா என்ற மாணவியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின் பாறையால் தலையில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மல்லையா, கடைசியாக ஒரு ஆணுடன் பைக்கில் தனது ஆடையை மறைத்த படி பர்தா அணிந்து சென்றுள்ள சிசிடிவி காட்சி பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிசிடிவி ஆதாரத்தை வைத்து பொலிசார் முகமது அக்பர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

16 வயதான அமினா மல்லையாவும், 24 வயதான அக்பரும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். அக்பர் காய்கறி வியாபரம் நடத்தி வந்துள்ளார். இருவரும் கடந்த மூன்று மாதங்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிசார் அளித்துள்ள தகவலில், அக்பர், மல்லையாவிடம் பணம் கேட்டதாகவும், ஆனால், மல்லையா தர மறுக்க அவர் கத்தியால் தாக்கியுள்ளார்.

பின்னர், மல்லையா தன் தாயிடம் கூறிவிடுவேன் என மிரட்ட அக்பர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லாமல் பிரியாணி வாங்கி தருவதாக கூறி நகரத்தின் புறநகர் பகுதிக்கு அழைத்து சென்றதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். எனினும், கொலைக்கான காரணம் குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments