படுக்கையில் மனைவியுடன் இருந்த கணவர்! எட்டி பார்த்தவருக்கு நடந்த விபரீதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாகப்பட்டினத்தில் தனது மனைவியுடன் படுக்கையில் ஒன்றாக இருந்ததை நபர் ஒருவர் எட்டிப்பார்த்த குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திசன் என்பவர் தனது மனைவியுடன் ஒன்றாக இருந்ததை இவரது நண்பரான சங்கர் எட்டிப்பார்த்துள்ளார்.

இதனை அறிந்து அவமானமடைந்த கார்த்திசன், இந்த சம்பவத்தை தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி கார்த்திசன் மற்றும் சங்கர் உட்பட நண்பர்கள் 8 பேர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதில் போதை தலைக்கேறியதில், எதற்காக எனது படுக்கையறையை எட்டிப்பார்த்தாய்? என கார்த்திசன், சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சங்கரை தாக்கியுள்ளனர். இதில் அன்பரசன் என்பவர் பீர் பாட்டிலால் சங்கரை குத்தியதில், சங்கர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளார்.

பின்னர், சங்கர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அன்பரசன் வீட்டின் பின்பக்கம் புதைத்து விட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு கழிந்துவிட்ட நிலையில், சங்கரின் மனைவி அளித்த புகாரின் பேரில் பொலிசார் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது சங்கர் புகைக்கப்பட்ட இடத்தை தோண்டி, அவரது எலும்புக்கூடு எடுக்கப்பட்டு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments