பிரபல இயக்குனரின் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை

Report Print Jubilee Jubilee in இந்தியா

பிரபல இயக்குனர் சசிக்குமாரின் மேலாளர் உதயகுமார் (48) தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து இயக்குனர் சசிக்குமாரிடம் மேலாளராக பணிபுரிந்து வந்த உதயகுமார், அவரின் கடந்த 2 படங்களில் வேலை பார்க்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் காரைக்காலில் அவர் ஒரு தனியார் ஹொட்டலில் தங்கியுள்ளார்.

நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அவரது அறைக்கதவு திறக்காததால் ஹொட்டல் ஊழியர்கள் அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

சினிமா வாய்ப்பில்லாமல் இருந்ததாலும், குடும்ப வறுமை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments