குடிகார கணவரை சமாளிக்க உருட்டுக் கட்டையை எடுத்த மனைவி: நடந்த விபரீத சம்பவம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

சென்னையில் குடித்து விட்டு தகராறு செய்த கணவனை மனைவி உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு.வி.க நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி நிர்மலா தேவி. இவர்களுக்கு லோகேஸ்வரன், லோகப்பிரியன் என்ற மகன்கள் உள்ளனர்.

ரவிசந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் வழக்கம் போல மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரது மனைவி நிர்மலாதேவி ஆத்திரத்தில் ரவிச்சந்திரனை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் அவரது முகம் சிதைந்து ரத்தவெள்ளத்தில் விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து விசாரணை நடத்திய திரு.வி.க.நகர் பொலிசார் நிர்மலா தேவியை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments