என்னை படுக்கைக்கு அழைத்தனர்! கபாலி பட நடிகை அதிர்ச்சி தகவல்

Report Print Jubilee Jubilee in இந்தியா
2608Shares

பாலிவுட்டில் பட வாய்ப்பு பெற தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற கபாலி படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் நடித்த ஒரு குறும்படத்தின் நிர்வாண காட்சிகள் இணையத்தில் கசிந்து அவரது புகழ் பட்டிதொட்டி எல்லாம் பரவியது.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டவர்களை எனக்கு தெரியும். நல்ல வேளை எனக்கு அது போன்று எதுவும் நடக்கவில்லை.

ஒரு முறை தென்னிந்திய சினிமாவில் நடிகர் ஒருவர் என் ஹொட்டல் அறைக்கு போன் செய்து கடலை போட்டார். ஆனால் நான் அவரிடம் கடுமையாக பேசினேன். அதன் பிறகு அவர் என்னிடம் சண்டை போட்டார்.

அதே போல் பாலிவுட்டில் ஒருவர் எனக்கு போன் செய்து ஒரு பட வாய்ப்பு தொடர்பாக நீங்கள் ஒரு முக்கிய நபரை சந்திக்க வேண்டும். ஆனால் அதற்கு அவருடன் படுக்கையை பகிர சம்மதமா என்று கேட்டார்.

உடனே நான் சிரித்து விட்டு என்னுடன் படுக்க விரும்பும் நபர் நரகத்திற்கு செல்லட்டும் என்றேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments