மானம் காத்த மகராசிக்கு இப்படி ஒரு நிலைமையா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருமணத்தின் போது மணப்பெண் மாயமானதால் மணமகனுக்கு வாழ்க்கை கொடுத்து அவரது மானத்தை காப்பாற்றிய பெண் தற்போது வரதட்சணை கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த சதீஷ்குமார்(36) என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் திருமண நாள் அன்று மணப்பெண் மாயமானதால், இக்குடும்பத்தினரின் குடும்ப கவுரவம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி திவ்யா( 26) என்பவர், சதீஷ்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

திவ்யா வீட்டில் ஒரு சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை செய்தனர். மாணவி என்பதால், திவ்யா ராமநாதபுரத்திலும் கணவர் சதீஷ்குமார் சென்னையிலும் வசித்தனர்.

கல்லுாரி படிப்பு முடிந்ததும் சென்னை சென்ற திவ்யாவிடம் மேலும் வரதட்சணை கேட்டு, சதீஷ்குமார் குடும்பத்தினர் துன்புறுத்தினர்.

இதனால், மனமுடைந்த திவ்யா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பினார். பணம், நகை கேட்டு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்து துரத்தியதாக ராமநாதபுரம் மகளிர் பொலிசில் திவ்யா புகார் கொடுத்தார்.

இதன்படி கணவர் சதீஷ்குமார், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments