ஐந்து பேருக்கு உயிரளித்த தொழிலாளி: துயரமான நேரத்தில் தெளிவான முடிவெடுத்த உறவுகள்!

Report Print Basu in இந்தியா

திருச்சியில் உயிரிழந்த தச்சு தொழிலாளியின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லங்குறிச்சியை சேர்ந்த 32 வயதான தச்சு தொழிலாளி கலிய மூர்த்தியின் உடல் உறுப்புகளே இவ்வாறு தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி விபத்தில் காயமடைந்த கலிய மூர்த்தி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், 21ம் திகதி தனியார் மருத்துவமனையில் கலிய மூர்த்திக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.

மிகவும் துயரமான நேரத்தில் கலியமூர்த்தியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து கலியமூர்த்தியின் உடலில் இருந்து அகற்றப்பட்ட கல்லீரல் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

சிறுநீரகம் ஒன்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் மற்றொரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கண்கள் இரண்டும் திருச்சியில் உள்ள மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன. கலியமூர்த்தியின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments