சசிகலா புஷ்பா கைது?

Report Print Fathima Fathima in இந்தியா

ராஜ்யசபா எம்பியான சசிகலா புஷ்பாவை கைது செய்ய இன்று பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே சசிகலா புஷ்பா மீது வழக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது இவர்களது வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்தவழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக போலியான தகவல்களை கூறி நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் பொலிசில் புகார் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவி்ட்டார்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொலிசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சசிகலா வரவிருப்பதாக தெரிகிறது.

இதன்போது இவரை கைது செய்ய பொலிசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments