கோவையை கதிகலங்க வைத்த சசிகுமார் கொலை வழக்கு: மர்மநபர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

Report Print Basu in இந்தியா

கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் 36 வயதான சசிகுமார் கடந்த மாதம் 22ம் திகதி மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கு சிபிசிஐடி பொலிஸிக்கு மாற்றப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த 15 சிசிடிவி கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை சிபிசிஐடி பொலிசார் ஆய்வு செய்தனர். இதில் 4 பேர் இரண்டு பைக்குகளில் அவரை பின்தொடர்வது தெரிந்தது.

இந்நிலையில் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ள சந்தேகத்திற்குரிய நான்கு மர்மநபர்களின் புகைப்படத்தை மாநகர பொலிசார் மற்றும் சிபிசிஐடி பொலிசார் வெளியிட்டனர்.

இந்த படத்தில் உள்ள நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 9498104441 என்ற எண்ணிலோ அல்லது sidcbcidcbe@gmail.com என்ற மெயில் ஐ.டி.,யில் தகவல் தெரிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments