பாதுகாப்பு சாதனங்களை முடக்கி நூதன கொள்ளை

Report Print Arbin Arbin in இந்தியா

ஹரியானா மாநிலத்தில் கணணி விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு சாதனங்களை முடக்கி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் பரீதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவர் 'மைக்ரோ வேர்ல்டு' என்ற பெயரில், மடிக்கணணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த கடையின் பாதுகாப்பு சாதனங்களை முடக்கி பூட்டை உடைத்து, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மடிக்கணணிகள் சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார், அருகில் இருந்து மற்றொரு கடையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா பதிவுகளை ஆய்வு செய்ததில், நான்கு பேர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளர் விக்ரம் சிங் கூறுகையில், கடையின் ஷட்டர் அல்லது பூட்டை யாராவது தொட்டால், உடனே அலாரம் ஒலிப்பதுடன், மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துவிடும்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கடையின் உள்ளே 16 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளாக இத்தகைய பாதுகாப்பு நடைமுறை உள்ளது.

சம்பவம் நடந்த இரவு எந்த குறுந்தகவலும் வரவில்லை. கண்காணிப்பு கமெரா பதிவுகளையும் கொள்ளையர்கள் அழித்துவிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments