இந்த மனுவுக்குத் தான் தனக்கு மிரட்டல் வரவில்லை: டிராபிக் ராமசாமி

Report Print Santhan in இந்தியா

ஜெயலலிதா உடல் நிலை குறித்து நீதி மன்றத்தில் போட்ட மனுவுக்கு தான் அரசு தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வரவில்லை என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 12 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரின் உடல் நிலை குறித்து சரியான தகவல்கள் தெரியாததால் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில், தான் நீதிமன்றத்தில் போடும் ஒவ்வொரு மனுக்களுக்கும் கட்சியின் சார்பிலிருந்து மிரட்டல்கள் வரும். ஆனால் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து போட்ட மனுவுக்கு தனக்கு எந்த வித மிரட்டலும் வரவில்லை என கூறினார்.

மேலும் அதிமுக தொண்டர்களுக்கே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து சரியாக தெரியாத நிலையில், அவர்களும் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தெரிய ஆவலாக இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் சமர்பிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments