தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து: தலைவர்கள் கருத்து என்ன?

Report Print Santhan in இந்தியா

தமிழக உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை, உயர்நீதிமன்றம் சட்ட விரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்கவும், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

ஆளுங்கட்சியும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துக் கொண்டு உருவாக்கிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பை மதித்து உள்ளாட்சித் தொகுதிகளை மறுவரையறை செய்து, முறையாக இடஒதுக்கீட்டை இறுதி செய்து, அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வைகோ

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்துள்ளதை அவர் வரவேற்றுள்ளார். இதனால் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன்

உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை ஏற்று, மாநிலத் தேர்தல் ஆணையம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கி, இடஒதுக்கீட்டு முறையை சரியாக பின்பற்றி ஜனநாயக முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments