மேல் முறையீடு! உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19ஆம் திகதிகள் அன்று தேர்தல் நடக்க இருந்த நிலையில் தேர்தலை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் நேற்று உத்தரவிட்டார்.

திமுக தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பை அவர் வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

மேல்முறையீட்டில் தேர்தல் ஆணையத்துக்கு சாதகமாக தீர்ப்பு வருமா அல்லது பழைய தீர்ப்பே நீடிக்குமா என்கிற எதிப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments