ஜெ. சிகிச்சைக்கு மேலும் ஒரு லண்டன் மருத்துவர்: பரபரக்கும் அப்பல்லோ

Report Print Arbin Arbin in இந்தியா

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் பியெல் மீண்டும் சென்னை வந்த நிலையில், மற்றொரு மருத்துவரையும் அவர் உடன் அழைத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு பெற்ற லண்டனை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பியெல். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வரவழைக்கப்பட்டிருந்தார்.

முதல்கட்ட சிகிச்சையை முடித்துவிட்டு கடந்த 2ம் திகதி ரிச்சர்ட் பிரித்தானியா திரும்பிவிட்டார். அங்கு அவர் அப்பாயின்மென்ட் கொடுத்த சில அவசர பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டியுள்ளதால் அவர் திரும்பியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் குறிப்பிட்ட மருத்துவரை உடனடியாக திரும்பி வருமாறு அப்பல்லோ நிர்வாகமும், சசிகலா உறவினர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மறுபடியும் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொடர்பான தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க ரிச்சர்ட் மற்றும் அவரது குழுவினர் நேற்று சென்னைக்கு வந்தனர்.

இந்நிலையில் லண்டனிலிருந்து கூடுதலாக ஒரு சிறப்பு மருத்துவரும், அப்பல்லோ வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அவரது பெயர் விவரம் இன்னும் வெளியாகவில்லை. இவரும் சிறப்பு நிபுணர் என்று கூறப்படுகிறது. இதனால் அப்பல்லோ மருத்துவமனை வளாகம் சற்று பரபரப்பான சூழலில் காணப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments