மனைவிக்கு துரோகம் செய்த 75 வயது முதியவர்: அதிரடி முடிவை எடுத்த மனைவி

Report Print Arbin Arbin in இந்தியா

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துரோகம் செய்த 75 வயது கணவனின் கை கால்களை உடைக்க அவரது மனைவி தனியார் நிறுவனத்தை நாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் லோதான் தெருவில் அமைந்துள்ள ஒரு துப்பறியும் தனியார் நிறுவனத்தை நாடிய 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நூதனமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

மட்டுமின்றி தாம் எடுத்து வந்த 50 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு அளித்த அந்த பெண்மணி, தமது கணவருக்கு நல்ல பாடம் புகட்டும் வகையில் அவரது கை கால்களை உடைக்க ஆட்களை ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டுள்ளார்.

முதலில் அவரது கோரிக்கையை நிராகரித்த அந்த துப்பறியும் நிறுவனம், குறிப்பிட்ட பெண்மணிக்கு புத்தி சுவாதீனம் இல்லையோ என கருதியது. மட்டுமின்றி அவருக்கு அப்போதைய கோபம் தணிந்தால் நிலைமை கட்டுக்குள் வரலாம் எனவும் கருதி முடிவை தெரிவிக்க தாமதப்படுத்தியுள்ளனர்.

ஆனால் குறிப்பிட்ட பெண்மணியின் கதையை கேட்டதும், அவரது கணவரின் கள்ளத்தொடர்பு குறித்து அறிந்ததும், இவர் சொல்லும் கதை நம்பத்தகுந்தது என அந்த துப்பறியும் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வழக்கை ஏற்று நடத்த முடிவு செய்த நிறுவனம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிட்ட அந்த 75 வயது முதியவர் தனது உடன் பணியாற்றும் நபர் ஒருவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது.

சில நாட்கள் அந்த முதியவரை கண்காணித்த நிறுவனத்திற்கு மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் குறிப்பிட்ட நேரங்களில் இந்த முதியவர் தமது வீட்டின் குறிப்பிட்ட ஜன்னல் பக்கம் நிற்பதாகவும்,

அதேவேளையில் அந்த பெண்மணியும் அவரது வீட்டின் வாசலில் நின்று சைகை மொழியில் இருவரும் பேசிக்கொள்வதும், பின்னர் சில நிமிடங்களில் இவர் வீட்டில் நின்று கிளம்பிச் செல்வதும், குறிப்பிட்ட பெண்மணியின் வீட்டில் இவர்கள் இருவரும் சில நிமிடங்கள் ஒன்றாக செலவிடுவதும் துப்பறியும் நிறுவனத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த தகவல்களை அனைத்தையும் கேட்டுக்கொண்ட குறிப்பிட்ட பெண்மணி, ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே அந்த துப்பறியும் நிறுவனத்திடம் முன்வைத்துள்ளார்.

உயிருக்கு எவ்வித ஆபத்தும் வருத்த வேண்டாம் என்பதே அது. ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தை கேள்வியுற்ற சில உளவியல் மருத்துவர்கள், குறிப்பிட்ட தம்பதிகளுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கினாலே போதுமானது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments