ராஜாத்தி அம்மாளை அப்பல்லோவுக்கு அனுப்ப தயங்கிய கருணாநிதி?

Report Print Deepthi Deepthi in இந்தியா

உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக பல்வேறு தமிழக தலைவர்கள் சென்றபோதிலும், சசிகலா நடராஜன் - ராஜாத்தி அம்மாளின் சந்திப்பு தான் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் துணைவியாரான ராஜாத்தி அம்மாள், முதல்வர் உடல்நிலை பற்றி அறிய நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்

இரவு 9.30 மணியளவில் சி.ஐ.டி காலனியில் இருந்து அப்பல்லோ வந்தவர், அங்கு சசிகலாவைச் சந்தித்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் 45 நிமிடங்கள் விவாதித்து இருக்கிறார்.

இந்நிலையில், ஆரம்பத்தில் ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ மருத்துவமனை செல்வதற்கு கருணாநிதி அனுமதி அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா ஒரு பெண் என்பதால் நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க செல்ல வேண்டும் என கருணாநிதியிடம் ராஜாத்தி அம்மாள் கூறியிருக்கிறார்.

ஆனால், அதிமுக கட்சியினரின் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்களோ? என்று கருதி, தயக்கம் காட்டியுள்ளார் கருணாநிதி.

அதன்பின்னர் பல்வேறு தலைவர்கள் அப்பல்லோவிற்கு சென்று வருவதை பார்த்த கருணாநிதி க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கும் சகிகலா நடராஜனிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் யோசித்த சசிகலா, அதன் பின்னர் வாருங்கள் என ஒப்புதல் அளித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments