சசிகலா என்னுடைய தாய்க்கு சமமானவர்: ஜெயலலிதாவின் நெகிழ்ச்சியான பேச்சு

Report Print Raju Raju in இந்தியா

என் தோழி சசிகலா என் தாயின் இடத்தை நிரப்பியவர் என முதல்வர் ஜெயலலிதா சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறிய விடயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா சில வருடங்களுக்கு முன்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் அரசியல் வாழ்க்கை குறித்தும், அவரின் சினிமா பயணம் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் அவர் மனம் திறந்து பதிலளித்திருந்தார்.

அதில் முக்கிய கேள்வியாக, பல சர்ச்சைகள் எழுந்தாலும் நீங்கள் ஏன் சசிகலாவுடன் உங்கள் நெருங்கிய நட்பை இன்னும் தொடர்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, என் மீது கொண்ட விசுவாசம் காரணமாக பல துயரங்களை சசிகலா சந்தித்துள்ளார், சிறையில் கூட ஒரு வருடம் இருந்துள்ளார்.

நான் அரசியல் வாழ்க்கையில் முழு நேரமும் இருப்பவள். என் குடும்ப நிர்வாகத்தை கவனிக்க எனக்கு நேரமில்லை.

எனக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவது, குடும்ப நிர்வாகத்தை சுமப்பது போன்றவற்றை சசிகலா தான் எனக்காக செய்து வருகிறார் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதன் படி பார்த்தால் சசிகலா என் உடன் பிறவா சகோதரி மற்றும் என் தாயின் இடத்தை நிரப்பியவர் என ஜெயலலிதா நெகிழ்ச்சியுடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments