கருணாநிதிக்கு சந்தேகப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது! பிரபல பத்திரிக்கை

Report Print Deepthi Deepthi in இந்தியா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா துறைகளை மாற்றுவதற்கு எவ்வாறு கையெழுத்து போட்டார்? இது அவருடைய கையெழுத்துதானா? என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஜெயலலிதா போடும் கையெழுத்துக்கள் அவருடையதுதானா? என்பதை கண்டறிய வேண்டும் என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.

கருணாநிதியின் இந்த மேற்கோளுக்கு, நமது எம்ஜிஆர் பத்திரிகை பதிலடி கொடுத்துள்ளது.

அதில், சமீப காலமாக கருணாநிதிக்கு சந்தேகப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது. இப்படியே போனா "நான் கருணாநிதி தானா?" என்று அவர் அவரையே சந்தேகித்துக்கொள்கிற நிலைமையும் ஏற்படலாம்!

தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா ‘திகாரில்' ஒரு அறை பெற்றார் என்றால், தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருச்சி சிவாவோ தில்லி ஏர்போர்ட்டில் திருவாளர் கருணா தற்போது மேற்கோள் காட்டுகிற அந்த உத்தம அம்மையிடம் ஓங்கி நாலு ‘அறை' பெற்றார்.

இவ்வாறு அறை வாங்கிய, தமது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரின் பதவியை பறிக்கவில்லை, மாறாக கன்னத்தில் அறைவிட்ட அப்பெண்ணின் செயலை கண்டிப்பதை விட்டு, அவரை மேற்கோள் காட்டியிருப்பது வெட்கக்கேடு அல்லவா! என நமது எம்ஜிஆர் பத்திரிகை எழுதியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments