அப்பல்லோவில் நுழைய முயன்ற மர்ம கார்: யாருடையது?

Report Print Basu in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென மர்ம கார் ஒன்று நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவமனையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென இனேவா கார் ஒன்று மருத்துவமனைக்குள் செல்ல முயன்றுள்ளது.

அப்போது, பொலிசார் காரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், அந்த காரை பறிமுதல் செய்த பொலிசார், அருகில் உள்ள காவல் நிலையம் அழைத்து சென்று ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த கார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் கார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஓட்டுநரையும், காரையும் பொலிசார் விடுவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments