மு.க ஸ்டாலின் திடீர் கைது!

Report Print Raju Raju in இந்தியா

மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற ரயில் மறியல் போரட்டத்தில் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் பெலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவேரி மேலாண்மையை உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. அதற்கு திமுக, காங்கிரஸ் போன்ற முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தின.

அதன் படி இன்று சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போரட்டத்தில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். பெரம்பூர் ரயில்வே ஆடிடோரியத்தில் இருந்து ரயில் நிலையம் நோக்கி தனது கட்சியினருடன் ஊர்வலவாக சென்ற அவரை பொலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அவருடன் சென்றவர்களும் கைது செய்யபட்டு பின்னர் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல ரயில் ரயில் நிலையங்களில் தற்போது போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments