கொடிய நோய்க்கு இப்படி ஒரு தண்டனையா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

எய்ட்ஸ் நோயின் தாக்கத்தால் உயிரிழந்த நபரின் உடலை பொது சுடுகாட்டில் எரிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் உடல் வீட்டின் முன்பாக எரிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் சோரோ அருகே உள்ள டென்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் வேலை செய்து வந்தார்.

அப்போது எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டு உடல் நிலை மோசமானதால், சொந்த ஊர் திரும்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவரது உடலை எரிப்பதற்கு பொது சுடுகாட்டிற்கு எடுத்து சென்றபோது அக்கிராம மக்கள் தடுத்துள்ளனர்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காரணத்தால், இவரின் உடலை இங்கு எரிக்கக்கூடாது என புறக்கணித்துள்ளனர்.

பொலிசார், வருவாய் துறை அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், வேறு வழியின்றி எய்ட்ஸ் நோயாளியின் உடலை அவரது வீட்டின் முன்பாகவே உறவினர்கள் எரியூட்டினர்.

எய்ட்ஸ் ஒரு கொடிய நோய் என்றபோதிலும், அதன் தாக்கத்தால் இறந்துபோன நபரை இவ்வாறு பொதுமக்கள் புறக்கணித்திருப்பது அவர்களின் விழிப்புணர்வற்ற நிலையையே குறிக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments