ஓடும் காரில் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! அரசியல்வாதியின் மகன் அட்டூழியம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் 3 பேரால் கடத்தி, ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்தில் கடந்த வாரம் இரவு நேரத்தில் இளம் பெண் ஒருவர் தனது சகோதரியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்கு அருகில் காரில் வந்த மூன்று பேர் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அவர் ஓடும் காரிலே 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பின்னர் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தால் கொலை செய்து விடுவோம் என்று கூறி வழியில் இறக்கவிட்டு சென்றனர்.

சம்பவம் நடந்த மறுநாள் அந்த பெண் பொலிசில் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார், பிரின்ஸ் சல்லுஜா மற்றும் அவரது நண்பர்கள் டேவேந்திரா, பாரிட் அலி ஆகியோரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். இதில் பிரின்ஸ் சல்லுஜா என்பவர் பாஜக பிரமுகரின் மகன் ஆவார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் ராமன் சிங், இந்த சம்பவம் ஒரு வக்கிரமான மனநிலையை காட்டுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments