ஜெயலலிதா நலம் பெற வேண்டி பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா? நெகிழ்ச்சியான சம்பவம்!

Report Print Santhan in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் என பலர் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

அதன் பயனாக தற்போது ஜெயலலிதா நல்ல நிலையில் உள்ளதாகவும், ஓரிரு வார்த்தைகள் அவ்வப்போது பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரபல திரைப்பட நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான விவேக் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிப்பாடு ஒன்றை நடத்தினார். இந்த சிறப்பு வழிப்பாட்டில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட 27 வகையான படையல்களை வைத்து வழிபட்டார்.

அவரைத் தொடர்ந்து தற்போது நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவில் உள்ள கண்ணூர் அகத்தியர் ஆஸ்சிரமத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் சீராகி வீடு திரும்பவேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தியதாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இவரின் செயலைக் கண்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் பாரட்டியதாக கூறப்படுகிறது. வரலட்சுமியின் தந்தையான சரத்குமார் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments