வைகோ விடுதலை!

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டம் ஒன்றில் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துக்களை பேசினார். அப்போது காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்தது. வைகோ பேசியதை கியூ பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் 2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை நேற்று 3வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அருள் முருகன் முன்னிலையில் வந்தது. அப்போது, அரசு தரப்பில் 17சாட்சியங்கள் அளித்த தகவலின்படி 35கேள்விகள் கேட்கபட்டது.

கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய வைகோவிடம் ,நீதிபதி உங்கள் தரப்பில் சாட்சியங்கள் இருக்கிறதா என்று கேட்டார், அதற்கு சாட்சியங்கள் இல்லை என வைகோ தெரிவித்தார்,

மேலும் நான் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியது உண்மை தான் ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என்று தவறாக பதிவு செய்துள்ளனர் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று 20ம் திகதி தீர்ப்பு வழங்குவதாக கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

அதன்படி இன்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ சென்னை மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானர். நீதிபதி "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றத்தை நிருபிக்க போதிய ஆதாரம் சமர்ப்பிக்க படாததால் விடுதலை செய்வதாக கூறியுள்ளார்.

இதன் பின்னர் வெளியில் வந்த வைகோவிற்கு மதிமுகவின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து வைகோவிற்கு மாலை அனிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments