முதல்வர் உடல்நிலை பற்றி தெரிவிக்க முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல்நிலை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் பிரவீணா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வருக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவலை வெளியிட வேண்டும் என அனைவரும் கோர முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், முதல்வரின் உடல்நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments