இளம்பெண்ணின் தலையை வெட்டி நரபலி கொடுத்த மந்திரவாதி! திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Aravinth in இந்தியா

கொல்கத்தாவில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி இளம்பெண்ணின் தலையை வெட்டி நரபலி கொடுத்த மந்திரவாதி பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.

கொல்கத்தாவில் மேற்கு மிட்னாபூர் பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கடந்த புதன்கிழமை தலை இல்லாது இளம்பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலைப் பெற்ற பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டுள்ளனர்.

மேலும், பெண்ணின் சடலத்திற்கு அருகில் ஏதோ பூஜை, சடங்குகள் நடந்திருப்பதற்கான தடயங்களை கணடறிந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அந்த பகுதியில் பில்லி, சூனியம் போன்ற சடங்குகளில் ஈடுபட்டு வந்த ராமபதா மன்னா என்பவனை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

செல்வசெழிப்பை பெறுவதற்காக அந்த இளம்பெண்ணை கடவுளுக்கு நரபலி கொடுத்ததாக பில்லி, சூனியம் வைக்கும் ராமபதா ஒப்புக் கொண்டுள்ளான்.

மேலும், அந்த பெண்னை சாலையில் பார்த்ததாகவும், தனது மந்திர சக்தி மூலம் அந்த பெண்ணிற்கு உள்ள பிரச்சனைகளை தீர்த்து செல்வ செழிப்பை கொடுப்பதாக உறுதியளித்து அந்த பெண்ணை மயக்கி அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து, மந்திரவாதி ராமபதாவினை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இறந்த பெண் யாரென்று தேடி வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments