சைகையில் பேசுகிறார் ஜெயலலிதா: அப்பல்லோ அப்டேட்ஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா படுக்கையில் இருந்து எழுந்து உட்காருவதாகவும், சைகையில் பேசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் தொடர்ந்து செயற்கை சுவாச உதவியுடன் இருப்பதாலேயே சைகையில் பேசுவதாகவும், டிராக்கியாஸ்டோமி குழாய் அகற்றப்பட்ட பின்னர் அவரால் வழக்கம்போல் பேசமுடியும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவின் நுரையீரலில் இருந்த நீர்த்தேக்கம் வெற்றிகரமாக சீர் செய்யப்பட்டிருப்பதால் பகல் நேரங்களில் தூக்க மருந்துகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

எழுந்து உட்கார்ந்து, சைகையில் பேசுவதால் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் ஒரு மாதத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments