முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசுகிறார்: அப்பல்லோ அறிக்கை

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அதிமுக தொடண்டர்கள் தினமும் பிரார்த்தனைகள் செய்து வருகிறன்றனர்.

அரசியல் தலைவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது, நன்றாக அவர் பேசி வருகிறார்.

தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய், சர்க்கரை நோய் குழுவினரது கவனத்திலும், பிசியோத்தெரபி நிபுணர்களால் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது

ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments