துணை முதல்வருக்கு காதல் தூது அனுப்பிய 44,000 பெண்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

பீகார் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவை திருமணம் செய்து கொள்ள 44,000 பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பீகார் துணை முதல்வரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்.

இவர் பீகார் மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார், சாலைப்பழுது தொடர்பாக புகார்கள் பதிவு செய்ய வாட்ஸ் அப் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த எண்ணுக்கு மொத்தம் 47,000 தகவல்கள் வந்துள்ளன, இதனை படித்து பார்த்த போது தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

மொத்தம் 44,000 பெண்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து அனுப்பியிருந்தார்களாம், இதுகுறித்து தேஜஸ்வி யாதவோ, எனக்கு திருமணம் ஆகியிருந்தால் இவ்வளவு தகவல்கள் வந்ததற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும், நல்லவேளை திருமணம் ஆகவில்லை என கூறினாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments