ஜெயலலிதா எம்ஜிஆரை காதலித்தாரா? இல்லையா? அவரே கூறிய பதில்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் திகதி முதல் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் மருத்துவர்கள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலே அப்பல்லோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், பிசியோ6 தெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து வந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் முதல்வரின் உடல் நிலை குறித்து இன்று அப்பல்லோ தன்னுடைய 10 வது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல்வர் ஒரு வாரங்களில் வீடு திரும்பி விடுவார் என்ற செய்திகளும் உலா வருகின்றன.

அதற்கிடையில் முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூலவலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன.

அதைத் தொடர்ந்து தற்போது ஜெயலலிதா இளம்வயதில் தமக்கு யார் மீதெல்லாம் ஈர்ப்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஜா சனம் இந்திப்பாடலையும் பாடி எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா, என்ற கேள்விக்கு கூட அட்டகாச புன்னகையுடன் அசராமல் பதில் தருகிறார். ஜெயலலிதாவின் இயல்பு முகத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments