விஜயகாந்துக்கு தொண்டர்கள் நெருக்கடி! என்ன செய்யப் போகிறார்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 19ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக-வுக்கு போட்டியாக வேட்பாளர்களை களமிறக்க தேமுதிக திட்டம் வகுத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் டெபாசிட்டை இழந்த விஜயகாந்த் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றார்களாம்.

சொந்த ஊர் என்பதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என தொண்டர்கள் கருதுகின்றார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments