மீண்டும் அப்பல்லோ வந்தார் ஆளுநர்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு மாதமாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 1ம் திகதி மருத்துவமனைக்கு வந்த ஆளுநர், இன்று மீண்டும் வந்தார்.

அரைமணி நேரம் அப்பல்லோவில் இருந்து மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் நன்றாக பேசுவதாகவும், நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும் அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments