மாமியாரின் சேலையை பிடித்து இழுத்த மருமகன்

Report Print Fathima Fathima in இந்தியா
514Shares
514Shares
ibctamil.com

தமிழ்நாட்டில் மனைவியை இழந்த கணவர், கொழுந்தியாளை கட்டிக் கொடுக்க சொல்லி மாமியாரை தொந்தரவு செய்துள்ளார்.

கன்னியாகுமரின் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் டார்வின், இவருக்கும் சின்னவிளைப் பகுதியை சேர்ந்த ஷாபி மெர்சினா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் மெர்ஷினா பலியானார்.

இதனால் தனிமையில் இருந்த டார்வின், மெர்ஷினாவின் தங்கையான ஷாஜி மேகலாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது தாயார் ஆல்பியிடம் கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று மேலும் தகராறு நடந்துள்ளது, இதில் கோபமடைந்த டார்வின் ஆல்பியின் சேலையை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆல்பி அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார்.

நடந்ததை மேகலாவிடம் விவரிக்கவே, பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர், வழக்கு பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments