சிறுத்தையின் வாயில் இருந்து மகனை மீட்ட வீரத்தாய்

Report Print Fathima Fathima in இந்தியா
714Shares
714Shares
ibctamil.com

இந்தியாவின் நாசிக் நகரில் சிறுத்தைப்புலி வாயில் சிக்கிய நான்கு வயது மகனை தாய் ஒருவர் வீரத்துடன் மீட்டு வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்த பெண் அனிதா(வயது 30), கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிடவே, நான்கு வயது மகன் வைபவுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வயலில் வேலை செய்து மகனை காப்பாற்றி வந்துள்ளார், இந்நிலையில் சம்பவதினத்தன்று மக்காச்சோள வயலில் அறுவடைக்காக சென்றுள்ளார்.

அனிதா வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, சிறுவன் வைபவை அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை கவ்விச் சென்றது.

இதனை பார்த்ததும் அலறிய அனிதா பெரிய தடியுடன் சிறுத்தையை நோக்கி ஓடினார், அருகில் இருந்த பெண்களும் ஒன்று சேரவே சிறுத்தை பயந்து சிறுவனை விட்டு தப்பி ஓடியது.

சிறுத்தையின் பல்தடம் வைபவின் கழுத்தில் ஆழமாக பதிந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அனிதாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனையடுத்து தப்பியோடிய சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments