வங்கி முன் முழு நிர்வாண போராட்டம்! கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி

Report Print Basu in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் முதியவர் ஒருவர் வங்கி முன் சாலையில் முழு நர்வாணமாக தேசிய கொடியை ஏந்தி போராடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 8ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி, கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.

இதைதொடர்ந்து மக்கள் வங்கி முன் நீண்ட வரிசையில் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற வருகின்றனர்.

இதனால், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லியில் முதியவர் ஒருவர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முழு நிர்வாணமாக வங்கி முன் சாலையில் தேசிய கொடியுடன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைக்கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், சம்பவயிடத்திற்கு வங்கியின் காவலர்களும் பொலிசாரும் இணைந்து அவரை சமாதானப்படுத்தினர்.

சமீபத்தில் டெல்லியில் திருங்கை ஒருவர் வரிசையில் நீண்ட நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments