ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்கிறது எஸ்பிஐ?

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாத விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கடனை வாங்கிய சுமார் 63 கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாம்.

விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட சுமார் ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளார்களாம்.

இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன்தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அடுத்ததாக கேஎஸ் ஆயில் (ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ் (ரூ.526 கோடி மட்டுமே), ஜிஇடி பவர் (ரூ.400 கோடிகள்தான்) மற்றும் சாய் இன்போ சிஸ்டம் (ரூ.376 கோடிகளே) அடங்கும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments