தமிழச்சிக்கு என்ன நேர்ந்தது..! வெளியான பரபரப்பு தகவல்!

Report Print Basu in இந்தியா

தமிழக முதல்வர் குறித்த தவறான பதிவு வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை கிளப்பிய பிரான்ஸ் தமிழச்சி, கடந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் சமூக வலைதளத்தில் அதிரடி பதிவு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

கடந்த மூன்று வாரங்கள் இணைய தொடர்புக்கு வெளியே இருந்தேன். (வேறொரு நாட்டில்) தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு செய்ததாக என் மீது செப்டம்பரில் 77 வழக்கு பதிவுகள் தமிழகத்தில் அதிமுகவினரால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தன.

FIR செய்யப்பட்ட வழக்கு பதிவு இந்தியாவிற்குள் இருப்பவர்களிடம் 24 மணி நேரத்திற்குள்ளும் வேறொரு நாட்டு குடியுரிமை உள்ளவரிடம் புகார் அளிக்கப்பட வேண்டுமெனில் 20 தினங்களுக்குள்ளும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 55 நாட்களாகியும் இதுவரையில் எனக்கு தமிழக காவல்துறையினரிடம் இருந்து புகார் வராததால் தமிழக காவல்துறையினரின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை மீது வழக்கு தொடர தீர்மானித்தும் என் மீதான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்படியும் கோரி இந்திய நீதித்துறையை அணுகுவதற்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்துள்ளேன்.

அந்தம்மா இருந்தால் என்ன? செத்தால் எனக்கென்ன? ஆனால் மக்கள் விரோத அரசியல்வாதிகளை ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியல்வாதிகளை அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமூக தளத்தில் விமர்சிக்கும் கருத்துரிமையை எந்த அரசியல்வாதிகளாலும் ஒடுக்க முடியாது.

சுவாதி படுகொலையில் அபாண்டமாக குற்றச்சாட்டப்பட்டு காவல்துறையினரால் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட சாமானிய மனிதன் ராம்குமார் வழக்கில் நடந்தது என்ன என்பதை விசாரிக்க உத்தரவிடாத ஜெயலலிதாவின் அராஜக அரசியலும் அவ ரின் அடிமைகள் என்ன வேண்டுமானாலும் எங்களால் செய்துவிட முடியும் என்ற அதிகார துஷ்டப்பிரயோக ஜனநாயக / மனித உரிமை மீறல்களை கண்டித்து இந்திய நீதித்துறையில் விசாரணை நடத்தக்கோரி விரைவில் அணுக உள்ள தகவலை உலகத் தமிழ ர்களிடம் பகி ர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

அம்மான்னா சும்மாதான். ஆனால் மக்களென்னறால் மக்கள் எழுச்சி என்றால் மக்கள் சக்தி என்றால் என்னவென்று உளுத்துப்போன இந்திய மரமண்டை அரசியல்வாதிகளுக்கு காண்பிப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments