ஏடிஎம் மையங்களில் இலவச காய்கறி கொடுத்து அசத்திய விவசாயிகள்!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை இலவசமாகக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கறுப்புப் பணம் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஆளும் நரேந்திர மோடி அரசு கடந்த 8 ஆம் திகதி திடீரென அறிவித்தது.

இதையடுத்து, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற நாடெங்கும் உள்ள வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏடிஎம் மையங்களிலும் மக்கள் பணம் எடுக்க வரிசையில் பல மணிநேரம் காத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் வித்தியாசமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தாங்கள் விளைவித்த காய்கறிகளை வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து நின்ற மக்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ''இந்த முறை காய்கறி விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால், அவற்றை குறைந்த விலைக்கு விற்பதா? அல்லது தூக்கி எறிவதா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த இரண்டையும் செய்ய விரும்பாமல், அன்றாடம் தேவைகளுக்காக கால் கடுக்க பணம் எடுக்க வரிசையில் நிற்கும் மக்களுக்கு கொடுக்க முடிவு செய்தோம். இது எங்களுக்கு சந்தோஷமாகவும் உள்ளது'' என்று தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments