படிக்கணும் விட்டு விடு என கெஞ்சிய மாணவி: கல்லூரி மாணவனின் கொடூர செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலிக்க மறுத்த பத்தாம் வகுப்பு மாணவியை கல்லூரி மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக குத்தி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியின் பெயர் ஹெமா. அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நவீன் மாணவியை பல நாட்களாக பின் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவிக்கோ இதில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. இதனால் அவரை வெறுத்து பேசியுள்ளார். சம்பவ தினத்தன்று மாணவியை நவீன் மீண்டும் சந்தித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

மாணவியோ தான் படிக்க வேண்டும் எனவும், இதனால் உங்களை காதலிக்க முடியாது என்றும் கோபமாக கூறியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நவீன் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்ககூடாது என்பது போல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிழே கிடந்த மாணவியைக் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அவர் குறித்து இன்னும் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு காரணமான நவீன் மீது மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments