தவறான சிகிச்சையால் பலியான பெண்! மருத்துவருக்கு பொலிஸ் பாதுகாப்பு

Report Print Aravinth in இந்தியா

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த குயில்ஹில் பகுதியைச் சேர்ந்த தம்பதி பாலு, வைலட்.

இவர்களுக்கு அருள் மொழி மற்றும் கவிதா(24) என இரு மகள்கள் உள்ளனர்.

கவிதா முதுகலை பட்டம் முடித்துவிட்டு சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக (Lecturer) பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் எம்.பி.எல்., படிப்பு படிப்பதற்காக சென்னையில் இருந்து குன்னூருக்கு சென்ற கவிதாவிற்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கவிதா சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு, மருத்துவர் கொடுத்த மருந்தினால் கவிதாவிற்கு அலர்ஜி ஏற்பட்டு கவிதாவின் முகம், உடல் கருப்பு நிறமாக மாற தொடங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து சிகிச்சை அளித்த டாக்டரிடம் கவிதாவை மீண்டும் பாலு அழைத்துச் சென்றுள்ளார்.

ங்கு கவிதாவிற்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டும் உடலில் ஏற்பட்ட மாற்றம் குணமாகவில்லை.

தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கவிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோவை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5.45 மணி அளவில் கவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கவிதாவின் உடலை கோவையில் இருந்து குன்னூருக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

அப்போது பர்லியார் அருகே ஆம்புலன்சை வழிமறித்த பொலிசார், கவிதா இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

சுமார் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று பிரேத பரிசோதனை நடைபெறவுள்ள நிலையில், கவிதாவுக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவரின் வீடைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments