அகதிகள் முகாமில் தங்கியிருந்த தமிழர்கள் 32 பேர் மாயம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் வேலூர் மாவட்ட இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 32 பேர் மாயமானது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ஆறு அகதிகள் முகாமில் 3,553 பேர் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு காஸ் இணைப்பு, குடியுரிமை சலுகை தவிர மற்ற சலுகைகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன.

வாரந்தோறும் முகாமில் இருக்கும் அகதிகளை கணக்கெடுத்து வருவாய் துறையினர் பொலிஸ் நிலையத்தில் தெரிவிப்பார்கள்.

அகதிகள் வெளியூர் செல்ல வேண்டுமென்றால் வருவாய் துறையினரின் அனுமதியுடனேயே செல்ல வேண்டும்.

இந்நிலையில் கடந்த வாரம் கணக்கெடுப்பு நடத்தியதில் 32 பேர் மாயமானது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், வெளிநாடுகளில் உள்ள இவர்களது நண்பர்கள், உறவினர்கள் செல்வ செழிப்புடன் உள்ளனர்.

இதற்காக இவர்களும் உயிரை பணையம் வைத்து வெளிநாடு செல்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாயமானவர்கள் மூன்று மாதங்களில் திரும்பி வரவில்லை என்றால் அகதிகளுக்கான சலுகை எதுவும் கிடைக்காது என்றும், முகாமில் தங்க அனுமதிக்க அளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments