செல்ஃபியால் அதிகம் இறந்தவர்கள் எந்த நாட்டினர் தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

செல்ஃபி மோகத்தால் அதிகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் கார்நிகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திரப்ரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் செல்ஃபி மோகத்தால் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் செல்ஃபி தொடர்பில் எஞ்சிய நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி கடந்த 2014 மார்ச் மாதம் தொடங்கி உலகெங்கும் குறித்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 என்று இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

செல்ஃபி மோகம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக கருதுவது சமூகவலைத்தளங்கள் மட்டுமே என குற்றம்சாட்டியுள்ள குறித்த ஆய்வாளர்கள், தங்களின் செல்ஃபிக்களுக்கு நண்பர்களிடையே அதிக ஆதரவு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினாலே இதுபோன்ற ஆபத்தை தேடிச் செல்கின்றனர் என்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு உலகெங்கும் சுறா தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் செல்பியால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

மட்டுமின்றி உயிரிழந்தவர்கள் அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இதில் அனைவருமே 2000 ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments