அரசு விதித்த தடையை மீறுவோம்: சீறிய சீமான்

Report Print Arbin Arbin in இந்தியா

ஜல்லிக்கட்டு தடை நீடித்தால் தடையை மீறி வரும் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு தடை குறித்து பேசுவதற்கு காங்கிரஸ், திமுக கட்சிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றார்.

அவசரச்சட்டம் நிறைவேற்றி, வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அரசு அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நாம் தமிழர் கட்சி நடத்திக் காட்டுவோம் என்றார்.

500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்தது கருப்பு பணத்தையோ ஊழல் பணத்தையோ ஒழிக்காது. இது சாதாராண மக்களை பாதிக்ககூடிய செயலாகும் என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments