கலாபவன் மணியின் மரணத்தில் பிரபல நடிகைக்கு தொடர்பா?

Report Print Raju Raju in இந்தியா
999Shares

நடிகர் கலாபவன் மணியின் மரணத்துக்கும் தனக்கு எந்த வித சம்மந்தமுமில்லை என பிரபல நடிகை அஞ்சு அரவிந்த் கூறியுள்ளார்.

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் உடலில் மெத்தனால் கலந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இத்தனை மாதங்கள் கழித்தும் அவர் மரணத்தில் உள்ள சந்தேகம் விலகவில்லை. அவர் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

இது குறித்து சந்தேகத்தின் பேரில் பொலிசார் பலரிடம் விசாரித்தனர். அதில் ஒருவர் அவருடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகை அஞ்சு அரவிந்த்.

கலாபவன் மணியின் கெஸ்ட் அவுசுக்கு அடிக்கடி சென்று அஞ்சு அவருடன் பேசுவார் என சொல்லப்பட்டது.

இந்த விடயம் குறித்து பேட்டி அளித்த அஞ்சு அரவிந்த், நானும் கலாபவன் மணியும் நல்ல நண்பர்கள். அவர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நான் தொகுத்து வழங்கியுள்ளேன்.

அது சம்மந்தமாக அவரை தான் அடிக்கடி சந்திப்பது வழக்கம் என்றும், கலாபவன் மணி மரணமடைந்த திகதியில் தான் அவரை சந்திக்கவேயில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments