ஏழு வருடமாக குழந்தை இல்லை! ஆசையுடன் வளைகாப்பு கொண்டாடிய பெண்ணுக்கு நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை, கர்ப்பம் என நினைத்து பல மாதங்களாக சிகிச்சை அளித்து வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் வசித்து வருபவர் அமீர் அலி (29) இவர் மனைவி அசீனா (28). இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில், அசீனாவிற்கு கடந்த ஆண்டு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் செல்ல அவர் வயிற்றில் கட்டி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றி உள்ளனர்.

இதனையடுத்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் அசீனாவுக்கு மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது. சிகிச்சைகாக மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி அசீனா மாதா மாதம் மருத்துவ பரிசோதனைக்காக சென்று வந்துள்ளார். கடந்த மாதம் மருத்துவமனைக்கு சென்றபோது நவம்பர் 18ம் திகதி குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் 18 ஆம் திகதி ஆன பின்னும் அவருக்கு பிரசவ வலி வரவில்லை. இதனையடுத்து, இரு தினங்கள் முன்பு திடீரென தாங்க முடியாத வறிற்று வலி அசீனாவுக்கு ஏற்பட அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உங்க வயிற்றில் வளர்வது குழந்தை இல்லை, கட்டி என்று ஆதாரத்துடன் அசீனாவிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ள அசீனா, அரசு மருத்துவமனைக்கு சென்று இது குறித்து நான் கேட்டதற்கு அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை.

தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments