மதன் தொடர்மான முக்கிய ஆவணங்களை வர்ஷா அழித்துவிட்டாரா?

Report Print Santhan in இந்தியா

எஸ்ஆர்எம் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வேந்தர்மூவிஸ் மதன் கடந்த 21 ஆம் திகதி திருப்பூரில் அவரது தோழியான வர்ஷா என்பவரின் வீட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தோழி வர்ஷா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. மதனின் மனைவியுடன் நெருக்கத்தில் இருந்த வர்ஷாவுக்கு மதனுடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மதன் தலைமறைவாக இருந்த காலங்களில் வர்ஷா அவருக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்துள்ளதாகவும் அதன் பின்னர் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வர்ஷாவின் வீட்டை பொலிசார் சுற்றி வளைத்ததாகவும், அதைத் தொடர்ந்து மதனை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பேரூராட்சி சார்பில் சிலர் நேற்று கொசு மருந்து அடிப்பதற்காக வர்ஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் வர்ஷா வெளியே மட்டும் அடித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் கதவைத் திறந்து கூட யாரிடமும் அவர் பேசவில்லையாம். இதனால் பங்களாவின் பின்புறம் முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments