ஜெயலலிதாவை பாதித்த Cardiac Arrest என்றால் என்ன?

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திடீரென இதயத்துடிப்பில் பாதிப்பு (cardiac arrest) ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ஒட்டுமொத்த தமிழகமும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென இதயத்துடிப்பில் பாதிப்பு (cardiac arrest) ஏற்பட்டதை அடுத்து அவருக்கு ஆஞ்ஜியோ சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில் ஜெயலலிதா தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?

இதயநோய் நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில், இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும்.

இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்திலிருந்து ரத்தம் வெளியேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்பட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

இதயத்தசைகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுவது, நாட்பட்ட இதயநோய் பிரச்னை இருப்பது, மரபணு ரீதியாக இதய பாதிப்பு ஏற்படுவது போன்றவை இந்த சிக்கலை உருவாக்கும்.

நாட்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் இதயச் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு. நுரையீரலும் இதயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது என்பதால் அதன் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், சிறுநீரக கோளாறால் ஏற்படும் இதயநோய் சிக்கலை விட நுரையீரலால் இதயச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது குறைவு என விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு?

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments