ஜெயலலிதாவின் ரத்த உறவு! அப்பல்லோவில் வாக்குவாதம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.வுக்கு ஞாயிறு மாலை திடீரென்று இதய துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனை கேட் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா, என் அத்தையைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன். என்னை மருத்துவமனைக்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. நான் வழக்கமாக போயஸ் தோட்டத்தின் இல்லத்தில் என் அத்தையை அவ்வப்போது நேரில் சந்திப்பேன்.

ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் ஆன பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை.

இப்போதும் இங்கே வந்திருக்கிறேன். என் அத்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணமே தெரியவில்லை. ஏன் இபப்டிச் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. மீடியாவுடனும் பேசக் கூடாது எனவும் கூறுகின்றனர் என்றார்.


- Nakkheeran

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments