முதல்வர் ஜெயலலிதா காலமானார்? வதந்தியால் ஸ்தம்பித்து போன தமிழகம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே சிகிச்சை அளித்தனர்.

உடல்நலம் தேறிவந்த நிலையில் சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4ம் திகதி மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் உட்பட அனைவரும் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்த நிலையில் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியானதால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

எனினும் அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments